தெஹ்ரான்: அமெரிக்கா "பொருளாதார பயங்கரவாத பிரச்சாரம்" செய்கிறது, இதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று ஈரான் கோரிக்கை விடுத்துள்ளது.
சீனா, இத்தாலிக்கு அடுத்தபடியாக, கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடு ஈரான். இதற்கு, அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடை முக்கியமான ஒரு காரணமாக இருக்கிறது.
இந்த நிலையில்தான், ஈரான் வெளியுறவு அமைச்சர் முகமது ஜாவீத் ஜாரிப், ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியோ கட்டரஸ்சுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
கடிதம்
அந்த கடிதத்தில் அமெரிக்கா தங்கள் மீது விதித்துள்ள பொருளாதார தடையால், ஐரோப்பாவில் சிக்கி தவிக்கும் ஈரானியர்களை விமானங்களில் அழைத்து வருவது கூட கடினமான விஷயமாகிவிட்டது என குறிப்பிட்டுள்ளார். கொரோனா வைரஸ் பாதித்தவர்களுக்கு உதவ ஈரான் அரசு உருவாக்கிய செல்போன் ஆப், கூகுளால் சென்சார் செய்யப்படுவதாகவும், இது எந்த விதத்தில் நியாயம் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். ஈரான் மக்கள் மீது நடக்கும் பொருளாதார தீவிரவாத பிரச்சாரத்தை அமெரிக்கா நிறுத்த வேண்டும். உடனடியாக பொருளாதார தடையை விலக்க வேண்டும்.
" alt="" aria-hidden="true" />
மருந்து கொள்முதல்
ஐக்கிய நாடுகள் சபையும் அதன் உறுப்பு நாடுகளும் ஈரானிய மக்களுடன் சேர்ந்து ஈரானுக்கு எதிரான அதன் மோசமான மற்றும் பலனற்ற அணுகுமுறையை அமெரிக்க அரசு கைவிட வேண்டும் என்று கோருவது கட்டாயமாகும். இவ்வாறு அந்த கடிதத்தில் அமைச்சர் கூறியுள்ளார்.
பொருளாதார தடை இருப்பதால், எண்ணெய் ஏற்றுமதி செய்வதில் ஈரான் அதிக சிரமப்பட்டு வருகிறது. கொரோனா வைரசுக்கான, மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களை இறக்குமதி செய்வது கிட்டத்தட்ட சாத்தியமற்ற நிலையில் உள்ளது. இதுதான் ஈரானின் தற்போதைய கவலையாகும்.
" alt="" aria-hidden="true" />
பொருளாதர தடை
அணு ஆயுத தடை ஒப்பந்தத்தை ஈரான் மீறியதாக அமெரிக்கா குற்றம்சாட்டி அந்த நாடு மீது பொருளாதார தடை விதித்துள்ளது. இந் நிலையில், கொரோனா வைரஸ், COVID-19, ஈரான் முழுவதும் பரவியுள்ளது, கடந்த 24 மணி நேரத்தில் 75 பேர் இறந்துவிட்டதாகவும், 1,000 க்கும் மேற்பட்ட புதிய நோயாளிகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சகம் வியாழக்கிழமை அறிவித்துள்ளது.
பலி எண்ணிக்கை
இறப்பு எண்ணிக்கை 429 ஆகவும், நோயாளிகள் 10,075 ஆகவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன . ஐ.நா. செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக், ஈரானில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து பொதுச்செயலாளர் அன்டோனியோ கட்டரஸ் ஆழ்ந்த அக்கறை கொண்டுள்ளார் என்றும், ஐ.நா. அமைப்பு ஆதரவு அளித்து வருவதாகவும் கூறினார்.
" alt="" aria-hidden="true" />