திருவண்ணாமலை
திருவண்ணாமலை ஒன்றியம் நரியாப்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் சார்பில் பள்ளி மேலாண்மைக்குழு விழிப்புணர்வு ஊர்வலம் ஊராட்சி மன்ற தலைவர் கீதா வெங்கடேசன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் ராணி முன்னிலை வகிக்க, பள்ளி தலைமைஆசிரியர் வே.சரவணன் அனைவரையும் வரவேற்றார். ஊர்வலத்தில் பெற்றோர்கள் அம்மு நதியா ஜானகி தேவி ஆண்டாள் ஆசிரியர்கள் பழனி ஆனந்த் மணிமேகலை கலா சாந்தி உள்பட மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த ஊர்வலத்தில் பள்ளி வளர்ச்சிக்காக உறுதுணையாக இருத்தல் இடைநிற்றல் தவிர்த்தல் பள்ளி வயது குழந்தைகளை பள்ளியில் சேர்த்தல் பெண் பிள்ளைகளின் பாதுகாப்பு குறித்தும் மாணவர்கள் ஊர்வலத்தில் துண்டுபிரசுரங்களை வழங்கிச் சென்றதோடு விழிப்புணர்வும் ஏற்படுத்தினர். முடிவில் ஆசிரியர் பழனிமுருகன் நன்றி கூறினார்.