ரூ.198.39 கோடி செலவில் அடுக்குமாடி குடியிருப்பு-கடைகள்: முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார் September 27, 2019
ரூ.198.39 கோடி செலவில் அடுக்குமாடி குடியிருப்பு-கடைகள்: முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார்

September 27, 2019 • selva


ரூ.198 கோடியே 39 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான பன்னடுக்குமாடி குடியிருப்புகள், கடைகள் மற்றும் வீட்டு மனைகள் ஆகியவற்றை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.





தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-




தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் மூலமாக சென்னை, வில்லிவாக்கம் திட்டப்பகுதியில் சொந்த வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 'பி', 'சி' மற்றும் 'டி' பிரிவு அரசு ஊழியர்களுக்காக சுயநிதி திட்டத்தின் கீழ் 71 கோடியே 71 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 324 குறைந்த வருவாய் பிரிவு பன்னடுக்குமாடி குடியிருப்புகள், சென்னை மாவட்டம் இந்திரா நகர் மற்றும் ராமாபுரம், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் புறநகர் திட்டப்பகுதி19 ஆகிய திட்டப் பகுதிகளில் 126 கோடியே 68 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான பன்னடுக்குமாடி குடியிருப்புகள், கடைகள் உள்பட என மொத்தம் 198 கோடியே 39 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான பன்னடுக்குமாடி குடியிருப்புகள், கடைகள் மற்றும் வீட்டு மனைகள் ஆகியவற்றை தலைமை செயலகத்தில் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.


நிகழ்ச்சியில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர் டி. ஜெயக்குமார், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவர் வைரமுத்து, தலைமைச் செயலாளர் க.சண்முகம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர் ராஜேஷ் லக்கானி மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில், கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் 18 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல சிறப்பு மைய கட்டிடம், 8 கோடியே 54 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மருத்துவக் கட்டடங்களை முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்.

எனது மருத்துவமனை எனது பெருமை என்ற திட்டத்தின் மூலம் 4 ஆம்புலன்ஸ் வாகனங்களின் சேவையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

போக்குவரத்து கழகங்களை மேம்படுத்தும் பொருட்டு ஜெர்மன் வளர்ச்சி வங்கியின் கடன் உதவியுடன் 2213 புதிய பஸ்களும், 500 மின்சார பஸ்களும் வாங்கும் திட்டத்தை செயல்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறைக்கும் ஜெர்மன் வளர்ச்சி வங்கிக்கும் இடையே திட்ட உடன்பாடு கையெழுத்தானது.

தமிழ்நாடு கதர்கிராம தொழில் வாரியத்தின் மூலம் தயாரிக்கப்பட்ட 'சாரல்' என்ற பெயர் கொண்ட ஷாம்பூ, 'எழில்' என்ற 'பாடிவாஷ்', 'வைகை' கை கழுவும் திரவம் ஆகியவற்றை முதல்-அமைச்சர் இன்று அறிமுகப்படுத்தினார்.

Popular posts
மருங்கூர் VM கேஷ்யூஸ் நிறுவனர் தொழிலதிபர் திரு வீரவிஸ்வாமித்தின் அவர்கள் பண்ருட்டி அடுத்துள்ள சித்திரைச்சாவடி கிராமத்தில் இரண்டு கால்களையும் இழந்த ஊனமுற்றோர் குடும்பத்தினருக்கு நிவாரணம் அளித்து இரு மாணவர்களின் கல்வி செலவு முழுவதையும் ஏற்றுக்கொண்டார்
Image
மர்ம விலங்கை கண்காணிக்க வைக்கப்பட்ட கேமராவில் மரநாய் உருவம் தெரிந்தது
Image
பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்து 2 பேர் பாலி 11 பேர் காயம்
Image
வேகமாக பரவும் கொரோனா வைரஸ்: ஐரோப்பிய நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் நுழைய தடை - டிரம்ப் அதிரடி
Image
தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே நேற்று பெய்த மழையின் காரணமாக 43 வீடுகள் சேதம் அடைந்ததை பார்வையிட்ட பஞ்சாயத்து தலைவர் பாதிக்கப்பட்டவர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை இலவசமாக வழங்கினார்