இந்தியன் 2 பட விபத்து வழக்கு - சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம்
" alt="" aria-hidden="true" />

 

ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் இந்தியன்-2 படத்தில் நடித்து வருகிறார். 




 

இந்த படத்தின் படப்பிடிப்பு பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டையில் உள்ள ஈபிவி பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. இதற்காக அங்கு பிரமாண்ட செட் அமைக்கப்பட்டுள்ளது.




 

இந்தநிலையில் கடந்த 19-ம் தேதி  இந்தியன்- 2 படப்பிடிப்பு ஈவிபி பிலிம் சிட்டியில் நடைபெற்று வந்தபோது கிரேன் அறுந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயம் அடைந்தனர். இதனையடுத்து நசரத்பேட்டை போலீசார் கிரேன் ஆபரேட்டரை கைது செய்தனர்.

 

மேலும் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து இயக்குனர் ஷங்கருக்கும் நடிகர் கமல்ஹாசனுக்கும் இச்சம்பவம் குறித்து சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.  படபிடிப்பு விபத்து வழக்கை  நசரத்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். 

 

இந்நிலையில் வழக்கை சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம் செய்து சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்

Popular posts
மருங்கூர் VM கேஷ்யூஸ் நிறுவனர் தொழிலதிபர் திரு வீரவிஸ்வாமித்தின் அவர்கள் பண்ருட்டி அடுத்துள்ள சித்திரைச்சாவடி கிராமத்தில் இரண்டு கால்களையும் இழந்த ஊனமுற்றோர் குடும்பத்தினருக்கு நிவாரணம் அளித்து இரு மாணவர்களின் கல்வி செலவு முழுவதையும் ஏற்றுக்கொண்டார்
Image
வேகமாக பரவும் கொரோனா வைரஸ்: ஐரோப்பிய நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் நுழைய தடை - டிரம்ப் அதிரடி
Image
கூடலூர் நகராட்சியில் கொரோனா விழிப்புணர்வுக்காக காய்கறிகள் பழங்களை கொண்டு பொதுமக்கள் பார்வைக்கு வைத்துள்ளனர்
Image
ஊரடங்கு உத்தரவால் பலபேர் உணவில்லாமல் தவித்து வரும் நிலையில் நீலகிரி மாவட்ட கவுன்சிலர் மீனா மற்றும் குன்னூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் சுனிதா தலைமையில் 75 குடும்பங்களுக்கு ஒருவாரத்துக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் கொடுக்கப்பட்டன
Image
தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே நேற்று பெய்த மழையின் காரணமாக 43 வீடுகள் சேதம் அடைந்ததை பார்வையிட்ட பஞ்சாயத்து தலைவர் பாதிக்கப்பட்டவர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை இலவசமாக வழங்கினார்