திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டம் வானாபுரம் அருகே உள்ள கொட்டையூரில் அரசு ஆங்கில பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 60க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா துணி வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் பெற்றது இதற்கு பள்ளி தலைமை ஆசிரியை இந்திரா தேவி தலைமை தாங்கினார் அங்கன்வாடி பணியாளர்களான பருவராஜ குமாரி, ஜீவா உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட தண்டராம்பட்டு ஒன்றிய செயலாளர் ராஜா தேவராஜன் மற்றும் ஊராட்சி மன்றத்தலைவர் சிவரஞ்சனி ஆகியோர்கள் கலந்து கொண்டுமாணவ மாணவிகளுக்கு விலையில்லா துணிகள் வழங்கி பேசினர் இதில் அங்கன்வாடி ஆசிரியை சமீம் மற்றும் மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர் ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.